sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

339 அரசு தொடக்க பள்ளிகளில் மேலாண் குழு மறு கட்டமைப்பு

/

339 அரசு தொடக்க பள்ளிகளில் மேலாண் குழு மறு கட்டமைப்பு

339 அரசு தொடக்க பள்ளிகளில் மேலாண் குழு மறு கட்டமைப்பு

339 அரசு தொடக்க பள்ளிகளில் மேலாண் குழு மறு கட்டமைப்பு


ADDED : ஆக 18, 2024 04:07 AM

Google News

ADDED : ஆக 18, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாவட்டத்தில் உள்ள, 339 அரசு தொடக்கப்பள்ளிகளில், 2ம் கட்ட மறுகட்டமைப்பு நடந்தது.

குழந்தைகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி-களில், 2022ல் பள்ளி மேலாண் குழு மறுகட்டமைப்பு செயல்-பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவி காலம், இம்மாதம் முடிவடையும் நிலையில், அரசு பள்ளிகளில், 2024-26ம் ஆண்டுக்கான பள்ளி மேலாண் குழுவானது, புதிய உறுப்பினர்களை கொண்டு கட்டமைப்பு செய்யப்படுகிறது.பள்ளி மேலாண் குழுவில் உள்ள மொத்த உறுப்பினர்களில், 75 சதவீதம், அதாவது, 24 உறுப்பினர்களில், 18 பேர் பெற்றோர்க-ளாகவும், 50 சதவீதம் பேர், அதாவது, 12 பேர், பெண் உறுப்பி-னர்களாகவும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி மேலாண் குழு மறுகட்டமைப்பானது, கடந்த, 10ல், 50 சதவீதம், அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் கட்டமாக முடிக்கப்பட்டுள்-ளது. இரண்டாம் கட்டமாக, நேற்று, 339 அரசு தொடக்கப்பள்ளி-களில் மறுகட்டமைப்பு நடந்தது.மறுகட்டமைப்பு நடந்த பள்ளிகளில், பார்வையாளர்களாக மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், மாநில திட்ட அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்ட அலுவலர்கள், கலெக்டரால் நியமிக்கப்-பட்ட அலுவலர்கள் மற்றும் பள்ளி மேலாண் குழு கருத்தா-ளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். கலெக்டர் தலை-மையில், 8 பேர் அடங்கிய மாவட்ட அளவிலான பார்வையாளர் குழு, வட்டார கல்வி அலுவலர் பொறுப்பில், 6 பேர் அடங்கிய பார்வையாளர் குழுவினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பள்ளி மேலாண் குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சியை, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்-டனர்.






      Dinamalar
      Follow us