sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

154 பள்ளிகளில் பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு

/

154 பள்ளிகளில் பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு

154 பள்ளிகளில் பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு

154 பள்ளிகளில் பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு: தலைவர், துணைத்தலைவர் தேர்வு


ADDED : ஆக 25, 2024 06:54 AM

Google News

ADDED : ஆக 25, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாவட்டம் முழுவதும், 154 உயர்நிலை, மேல்நிலை பள்ளி-களில், பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்-தது. அதில், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் வட்டார வன மையத்தில் உள்ள, 15 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு நடந்தது. ஒவ்வொரு பள்ளியிலும், 24 உறுப்பினர்களை தேர்ந்தெ-டுக்கப்பட்டனர். அதில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் உட்-பட, 18 பெற்றோர், தலைமையாசிரியர், ஆசிரியர் பிரதிநிதி இருவர், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் அல்லது கல்வி-யாளர் ஒருவர், வார்டு உறுப்பினர் இருவர், ஒரு முன்னாள் மாணவர் என, 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

* மோகனுார் வட்டாரத்திற்கு உட்பட்ட உயர்நிலை, மேல்நி-லைப்பள்ளிகளில், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்களுக்கான மறு கட்டமைப்பு நடந்தது. இந்த மறு கட்டமைப்பில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர், கல்வியாளர், உள்-ளாட்சி பிரதிநிதிகள் என, அரசு அறிவிப்பின்படி, தகுதி உள்ள-வர்கள் பள்ளி மேலாண் குழு உறுப்பினர்களுக்கான தேர்வு செய்-யப்பட்டனர். எஸ்.வாழவந்தி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த மறு கட்டமைப்பில், பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பள்ளி மேலாண் குழு தலைவர், துணைத்த-லைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

* அதேபோல், பாலப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், தலைமையாசிரியர் மெஹருன்னிசா தலைமையில் நடந்த மறுகட்-டமைப்பு நிகழ்ச்சியில், செங்கப்பள்ளி பஞ்., தலைவர் நந்த-குமார், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலை-மையாசிரியர் அருணாசலம் தலைமையில், பள்ளி மேலாண் குழு தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்-யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்-டது. மேலும், அனைவரும் 'பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவோம்' என, உறுதி எடுத்துக்கொண்டனர்.

* திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் அரசு உயர்நிலைப்பள்-ளியில் நடந்த பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்-சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு, குழுவின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்-கினார்.

மாவட்டம் முழுவதும், 154 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்-ளிகளில், பள்ளி மேலாண் குழு மறு கட்டமைப்பில், தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us