/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
கரை உடையும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 15, 2024 02:58 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், 10 கி.மீ., சுற்றளவுக்கு மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது.
கடந்த ஒரு மாத-மாக மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, மோளகவுண்டம்பா-ளையம் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியை துவக்கியுள்ளனர்.இந்நிலையில், மோளகவுண்டம்பாளையம் பகுதியில் ஓரி-டத்தில் வாய்க்கால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு, கரை உடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசா-யிகள் பலர், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும், இன்னும் கரையை பலப்படுத்த வில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் வாய்க்கால் கரையை பலப்படுத்த, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முகூர்த்த நாட்களால்