/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலையோரம் வாகன நிறுத்தம் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சாலையோரம் வாகன நிறுத்தம் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மே 31, 2024 03:09 AM
கரூர்: கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சுக்காலியூரில் இருந்து வீராக்கியம் முதல் மாயனுார் வரை சாலை வரை நான்கு வழிசாலையாக உள்ளது. மாயனுார் முதல் பெட்டவாய்த்தலை வரை இரண்டு வழிசாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி சாலையின் வழியாக பஸ் உள்பட கனரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகளவு உள்ளது. சுக்காலியூர், வெங்ககல்பட்டி மேம்பாலம், உப்பிடமங்கலம் பிரிவு, வீரராக்கியம் பிரிவு, மாயனுார் போன்ற பகுதிகளில் சாலையோரம் ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. நீண்ட துாரம் பயணிக்கும் கனகர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கின்றனர்.
இதன் காரணமாக இரவு நேரங்களில் அவ்வப்போது விபத்துக்களும் நடக்கிறது. கரூர் -திருச்சி பைபாஸ் சாலையில் சாலையோரம் கனரக வாகன நிறுத்தப்படுவதை கண்காணித்து, முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.