/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாசூர் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் 3 ஆண்டுக்கு பின் தெரிந்த பாறைகள்
/
துாசூர் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் 3 ஆண்டுக்கு பின் தெரிந்த பாறைகள்
துாசூர் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் 3 ஆண்டுக்கு பின் தெரிந்த பாறைகள்
துாசூர் ஏரியில் தண்ணீர் குறைந்ததால் 3 ஆண்டுக்கு பின் தெரிந்த பாறைகள்
ADDED : மே 06, 2024 01:52 AM
எருமப்பட்டி: மாவட்டம் முழுதும் இந்தாண்டு போதிய மழை இல்லாததால், துாசூர் ஏரியில், 3 ஆண்டுக்கு பின் தண்ணீர் குறைந்து பாறைகள் வெளியே தெரிகின்றன.
எருமப்பட்டி யூனியன், துாசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியால் இப்பகுதியில் உள்ள, 250 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் நல்ல மழை பெய்யும் போது, தண்ணீர் காற்றாறு வெள்ளமாக மாறி பழையபாளையம் ஏரிக்கு வந்து, அதன் பின் துாசூர் ஏரிக்கு வரும் வகையில் நீர்வழிப்பாதை உள்ளது.
கொல்லிமலையில் கடந்த, 3 ஆண்டாக நல்ல மழை பெய்ததால் தண்ணீர் பழையபாளையம் ஏரி நிறைந்து துாசூர் ஏரிக்கு தண்ணீர் வந்தது. இதனால், தொடர்ந்து, 3 ஆண்டுகளாக ஏரி தண்ணீர் வெளியேறியதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், திடீரென நாமக்கல் நகராட்சியின் கழிவுநீர் ஏரியில் கலந்ததால், ஏரி நீர் மாசடைந்தது. ஆனால், கொல்லிமலையில் இருந்து வந்த தண்ணீரால் கழிவுநீர் கலந்தது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது.
ஆனால், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய மழை இல்லாததல் ஏரிக்கு தண்ணீர் வருவது நின்றது. இதையடுத்து, ஏரிக்கு கழிவுநீர் மட்டும் சென்று வந்ததால் ஏரி மாசடைந்த நிலையில், தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இந்நிலையில், தற்போது கடும் வெயிலால் ஏரியில் இருந்த தண்ணீர், 30 சதவீதமாக குறைந்ததால் பாறைகள் வெளியில் தெரிகின்றன. இதனால், இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.