/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் உரிய ஆவணம் இல்லாத ஏ.டி.எம்., பணம் ரூ.2.80 கோடி பறிமுதல்

ADDED : ஏப் 13, 2024 10:58 AM
ப.வேலுார்: ப.வேலுார் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில், வேளாண் அலுவலர் அஸ்வின் குமார் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூரிலிருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அதில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 2 கோடியே, 80 லட்சத்து, 40,000 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணம், கரூரில் உள்ள, 'கேவிபி' தனியார் வங்கியில் இருந்து, திருச்செங்கோடு ஐந்து மலை மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, ப.வேலுார் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.