/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை
ADDED : ஆக 02, 2024 03:48 AM
நாமக்கல்: இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள்படி, 2022-24ம் ஆண்-டிற்கான தொடக்க, நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆக., முதல், இரண்டாம் வாரங்களில் தொடக்க, உயர்-நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்ட-மைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில், நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலு-வலர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில், மேலாண்மைக்-குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மறுகட்டமைப்பின்போது, பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து மாணவ, மாணவியர்களின் வருகையை அதற்கான படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளியின் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்து பெற்றோரிடம் விளக்க வேண்டும். மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடை-வதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து பெற்-றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்-தப்பட்டது.