/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அக்கா, குழந்தை மாயம் தம்பி போலீசில் புகார்
/
அக்கா, குழந்தை மாயம் தம்பி போலீசில் புகார்
ADDED : மே 11, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி : எருமப்பட்டி அருகே, பொட்டிரெட்டிபட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் விக்ரம், 24. இவரது அக்கா புனிதா, 28. முசிறி அருகே வடமலைப்பட்டியில் கணவருடன் வசித்து வந்தார். கடந்த, 40 நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புனிதா, 4 வயது குழந்தையுடன், பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தன் தம்பி வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த, 2ல் வீட்டில் இருந்த புனிதா மற்றும் குழந்தையை காணவில்லை என, விக்ரம் எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.