/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருத்துவ காப்பீடு அட்டை பெற 3 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
/
மருத்துவ காப்பீடு அட்டை பெற 3 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
மருத்துவ காப்பீடு அட்டை பெற 3 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
மருத்துவ காப்பீடு அட்டை பெற 3 பேருக்கு 'ஸ்மார்ட் கார்டு'
ADDED : ஜூன் 19, 2024 01:46 AM
நாமக்கல், திருச்செங்கோடு தாலுகா, குமரமங்கலம், எளையாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்மலர். இவர், தன் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியும்; மல்லசமுத்திரம், லட்சுமிபுரத்தை சேர்ந்த தங்க
மணிக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும்; ப.வேலுார் தாலுகா, பொத்தனுார் காட்டு தெருவை சேர்ந்த சங்கீதா, மகள் கனிஷ்காவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அறுவை சிகிச்சை பெறவும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற வசதியாக, ரேஷன் கார்டு கேட்டு, கடந்த, மே மாதம் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக, புதிய மின்னணு ரேஷன் கார்டு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உமா அறிவுறுத்தினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும், புதிய மின்னணு ரேஷன்கார்டு அச்சிடப்பட்டு வரப்பெற்றது. அதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கு ஏதுவாக, மூன்று பேருக்கும், புதிய மின்னணு ரேஷன் கார்டுகளை, கலெக்டர் உமா வழங்கினார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.