/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு
/
துாய்மை பணியாளர்களின் சம்பள பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஏப் 25, 2024 04:43 AM
--குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்களை தவிர, தற்காலிக துாய்மை பணியாளர்கள், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு, ஒரு மாத சம்பளம் வழங்கப்படவில்லை என, புகார் எழுந்தது. இதனால், நேற்று முன்தினம், ஒரு நாள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் குமரன், ஒப்பந்ததாரரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் குமரன் கூறுகையில், ''குமாரபாளையம் நகராட்சியில், 87 தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் நிலுவை இருப்பதாக தெரியவந்தது. ஒப்பந்ததாரரை அழைத்து பேசி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது,'' என்றார்.

