/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ல் நாமக்கல்லில் சிறப்பு முகாம்
/
பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ல் நாமக்கல்லில் சிறப்பு முகாம்
பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ல் நாமக்கல்லில் சிறப்பு முகாம்
பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ல் நாமக்கல்லில் சிறப்பு முகாம்
ADDED : மார் 06, 2025 03:41 AM
நாமக்கல்: 'பிரதமரின் இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வரும், 11ல், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல-கத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசால், 'பிரதமரின் இன்டர்ஷிப் பயிற்சி' என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 21 முதல், 24 வயதுக்குட்பட்ட, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்-ளமோ மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்க-ளுக்கு, சிறந்த, 500 நிறுவனங்களில், ஓராண்டு, 'இன்டர்ன்ஷிப் பயிற்சி' வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற, 21 முதல், 24க்குள் இருக்க வேண்டும். ஒருமுறை மட்டும் மானிய உதவியாக, 6,000 ரூபாய் வழங்கப்படும். 12 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள், ஏற்க-னவே நேஷனல் அப்ரன்டீஸ்ஷிப் திட்டத்தின் மூலம், தொழிற்ப-யிற்சி பெற்றிருத்தல் கூடாது. மேலும், முழுநேர பணி அல்லது முழுநேர கல்வி ஆகியவற்றில் ஈடுபட்டிருத்தல் கூடாது. விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு, நாமக்கல் நகரில், மோகனுார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்-நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 11 காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை சிறப்பு சேர்க்கை முகாம் நடக்கிறது.
மேலும், விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 8220777776 என்ற மொபைல் போன் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.