ADDED : அக் 05, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த, 26ல் தலைமை ஆசிரியர்
மாணிக்கம் தலைமையில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவங்கியது.
2ல்
முடிவடைந்த இந்த முகாமில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட
காளிப்பட்டி தத்தெடுக்கப்பட்டது. இதில், 25 மாணவர்கள், 13 உழவார
பணிக்குழு அன்பர்கள் சார்பில், காளிப்பட்டி கோவிலை சுற்றி சுத்தம்
செய்யப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்
நடப்பட்டன.மேலும், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமு,
பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்களிடம் நாட்டு நலப்பணி திட்டத்தின்
அவசியம், மாணவர்களின் மாற்றம் குறித்து பேசினார். திட்ட அலுவலர்
மோகன்குமாரமங்கலம், முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
