ADDED : அக் 05, 2026 04:29 AM
அ நிறம் | அளவு
ப.வேலுார்:ஜேடர்பாளையம்
அருகே, கண்டி பாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி மகன் உதயகுமார், 28;
கட்டட மேஸ்திரி. இவரது மனைவி பிரியா, 20. தம்பதியர் காதலித்து
திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு, இரண்டு வயதில் ஆண் குழந்தை
உள்ளது. நேற்று முன்தினம் மதியம், வேலைக்கு சென்றுவிட்டு உதயகுமார்
வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் வீட்டில் யாரும்
இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து
ஜேடர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
