/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்
/
பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., மயக்கம்
ADDED : ஆக 07, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியன், களியனுார் அக்ரஹாரம் மற்றும் சமயசங்கிலி பஞ்., சார்பில் செங்குட்பாளையம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், நேற்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
பாதுகாப்பு பணியில், பள்ளிப்பாளையம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., மகுடபதி ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.