/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாநில கபடி போட்டி தி.கோடு அணிக்கு பரிசு
/
மாநில கபடி போட்டி தி.கோடு அணிக்கு பரிசு
ADDED : மே 11, 2024 11:28 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், திருச்செங்கோடு அணி முதல் பரிசை வென்றது.
நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில், 64ம் ஆண்டு, 'ஏ' கிரேடு கபடி போட்டி, கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று முன்தினம் இரவு, இறுதி போட்டிகள் நடந்தன. இதில், திருச்செங்கோடு அன்னைத்தமிழ் அணி முதல் இடத்தை பிடித்தது.
இரண்டாவது இடத்தை, ஈரோடு ஜி.எல்., ஸ்போர்ட்ஸ் அணி பிடித்தது. மூன்றாவது இடத்தில் ஈரோடு கபடி குழுவும், நான்காம் இடத்தை, சேலம் கிடீர் கிட்டு அணியும் பிடித்தது. இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் மணி, செயலாளர் அருள், பொருளாளர் நடேசன் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை, பதக்கம், ரொக்க பரிசு வழங்கினர்.
குளியலறையில் வழுக்கி சாய ஆலை அதிபர் பலி
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 49. சாயப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு, இரண்டு மகள்கள். தங்கவேல், வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்தார். கடந்த, இரண்டு நாட்களுக்கு முன் குளியலறைக்கு சென்றவர், வழுக்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இரண்டு நாட்களாக தங்கவேல் கீழே வராததால், அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அங்கு குளியலறை கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்த போது, தங்கவேலு இறந்து கிடந்தார். இதுகுறித்து, அவரது சகோதரர் சரவணன் கொடுத்த புகார்படி, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.