/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி
/
ஆசிரியர் இல்லாத நேரத்தில் சண்டையிட்டு மாணவர் பலி
ADDED : ஆக 26, 2024 02:44 AM
எருமப்பட்டி: வகுப்பு ஆசிரியர் வேறு பணிக்கு சென்றதால், மாணவர்கள் சண்-டையிட்டு உயிரிழப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்-ளது.
எருமப்பட்டி அருகே, வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ், கடந்த, 24ல் மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயி-ரிழந்தார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் நடத்தி விசார-ணையில், மாலை, 4:00 மணிக்கு மேல் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடக்க இருந்தது.
இதற்காக, கூட்ட அரங்கை தயார் செய்ய, பிளஸ் 1 ஆசிரியர் அங்கு சென்றுள்ளார். அப்போது, மாணவர்கள் காலணிகளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு விளையாடியுள்ளனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் விளையாட்டாக சண்-டையிட்ட போது, ஆகாஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தது தெரி-யவந்துள்ளது.