/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்
/
துவரை விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, உரம்
ADDED : ஆக 05, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனில், வேளாண்மை துறை மூலம் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் விதை, உயிர் உரம் உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் உள்ளிட்ட இடு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
எனவே, ஆர்வமுள்ள விவசாயிகள், எருமப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டோ அல்லது அந்த பகுதியை சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய வேண்டும் என, எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.