/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி இல்லாததால் அவதி
/
பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி இல்லாததால் அவதி
ADDED : ஏப் 04, 2024 04:35 AM
பள்ளிப்பாளையம்: குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லாததால், பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நிற்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்
பகுதியில் இருந்து, தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வசதிக்காக குடிநீர் வசதி அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுக்கு முன்பு பஸ் ஸ்டாப் பகுதியில், மேம்பாலம் கட்டும் போது குடிநீர் வசதியும் அகற்றப்பட்டு விட்டது. இதனால் தற்போது வரை குடிநீர் வசதி இல்லை.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை வெயில் சுட்டெரிக்கிறது. பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் குடிநீர் வசதி இல்லாததால், தாகம் எடுத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர். குடிநீர் தேடி அலைகின்றனர். சிலர் அருகில் உள்ள கடைகளில் பாட்டில் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குகின்றனர். வயதானவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.
எனவே பயணிகளின் தாகம் தீர்க்க, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் குடிநீர் வசதி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

