/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டேக்வாண்டோ போட்டி அரசு பள்ளி சாதனை
/
டேக்வாண்டோ போட்டி அரசு பள்ளி சாதனை
ADDED : ஆக 28, 2024 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: திருப்பூரில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் டேக்வாண்டோ விளையாட்டு அமைப்பு செயலாளரும், குளோப் டேக்வாண்டோ கிளப்பின் நிறுவனருமான வெங்கடேசன் தலைமையில், 13 மாணவ, மாணவியர் அடங்கிய குழு, இப்போட்டிகளில் விளையாடினர். இதில், பட்டணம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் மட்டும், 10க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ராசிபுரம் குழுவில் கலந்து கொண்டவர்களில், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, மொத்தம், 7 பதக்கங்களை வென்றனர். இதில், வெற்றி பெற்ற, 6 பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.