/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக அளவில் மரவள்ளி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ தகவல்
/
உலக அளவில் மரவள்ளி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ தகவல்
உலக அளவில் மரவள்ளி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ தகவல்
உலக அளவில் மரவள்ளி உற்பத்தியில் தமிழகம் முதலிடம் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ தகவல்
ADDED : ஆக 09, 2024 03:40 AM
நாமகிரிப்பேட்டை: 'உலக அளவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது,'' என, மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ பேசினார்.
நாமகிரிப்பேட்டையில் உழுவர் மன்றம் சார்பில் நடந்த கூட்-டத்தில் மரவள்ளியில் புதிய ரகம் அறிமுகம், விவசாயிகள் உட-னான கலந்துரையாடல் மற்றும் மரவள்ளி உணவு திருவிழா ஆகி-யவை நடந்தது. மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பைஜூ, மரவள்ளியில் புதிய பயிர் ரகத்தை அறி-முகம் செய்து வைத்து, உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:
எங்கள் ஆராய்ச்சி நிறுவனம் நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மரவள்ளி கிழங்கு பயிர்-களில் ஏற்படும் நோய்கள், புதிய நோய்த் தாக்குதல் ஆகியவற்றை கண்டறிந்து, அதற்கான நிரந்தரமான தீர்வை வழங்கி வருகிறது. உலக அளவில், இந்தியா உள்பட, 103 நாடுகளில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன. உலக அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களால் ஒரு ஹெக்டரில், 50 டன் அளவிற்கு மரவள்ளி மகசூல் பெறப்படுகி-றது.
பொதுவாக மரவள்ளியில், மாவு பூச்சி மற்றும் செம்பேன் தாக்-குதல் காணப்படும். இதைத் தடுக்க ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டுண்ணி தருவிக்கப்பட்டு, தற்போது விவசாயிகளுக்கு வழங்-கப்படுகிறது. இதை மரவள்ளியில் விடுவதன் மூலம் மாவு பூச்சி தாக்குதலை தடுத்து வருகிறோம். நாமக்கல் மாவட்டத்தில், இன்னும் ஓரிரு மாதங்களில் தென்னிந்திய அளவிலான, மாபெரும் மரவள்ளி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடக்க உள்-ளது.
இவ்வாறு பேசினார்.
முன்னதாக, கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மர-வள்ளி கிழங்கில் தயார் செய்யப்பட்ட கேசரி, முறுக்கு, ஜவ்வரிசி உணவு, கிழங்கு வடை உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்பட்-டன. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதால் விவசா-யிகள் நல்ல வருவாய் பெற முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்ப-டுத்தினர்.
திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஜெகநாதன், முத்துராஜ், ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் வேல்-முருகன், நாமக்கல் மாவட்டம் விவசாயிகள் சங்கத் தலைவர் பர-மசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.