/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள யோசனை
/
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள யோசனை
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள யோசனை
கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள யோசனை
ADDED : மே 18, 2024 01:11 AM
நாமக்கல்: ''கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க, வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், தேவையற்ற பொருட்களை அப்புறப்
படுத்த வேண்டும்,'' என, சுகாதாரப்
பணிகள் துணை இயக்குனர்
பூங்கொடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
இன்றைய நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. அரசு, தனியார் மருத்துவமனைகள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தில் சிகிச்சை பெறுவது என யாரும் இல்லை.கடந்த, ஆறு மாதமாக நாமக்கல் மாவட்டத்தில் மழை இல்லை. தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.
மழைக்காலங்களில், வீடுகளை சுற்றி உள்ள ஆட்டுரல், கொட்டாங்குச்சி, டயர், உடைந்த, தேவையற்ற பொருட்களில், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தேவையற்ற பொருட்களில் தேங்கும் மழைநீரில் தான் டெங்கு காய்ச்சல் உருவாக்கும், 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்களாகவே மருத்துவமனைக்கு சென்று மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தேவையான சிகிச்சை பெறலாம். மாவட்டம் முழுதும், 636 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், வாரந்தோறும், ஒவ்வொரு கிராமமாக சென்று, கொசுப்புழுவை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை கணக்கு எடுத்து, அப்பகுதியில் முகாமிட்டு, மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், புகை மருந்து அடிப்பது போன்ற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

