sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேளாண் சாகுபடியில் செலவை குறைக்க யோசனை

/

வேளாண் சாகுபடியில் செலவை குறைக்க யோசனை

வேளாண் சாகுபடியில் செலவை குறைக்க யோசனை

வேளாண் சாகுபடியில் செலவை குறைக்க யோசனை


ADDED : ஜூலை 18, 2024 01:08 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'வேளாண் சாகுபடியில், டி.ஏ.பி., யூரியாவை தவிர்த்து, சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்துவதன் மூலம், உற்பத்தி செலவை குறைக்கலாம்' என, வேளாண் இணை இயக்-குனர் கவிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில், தற்போது மழை பரவலாக பெய்து வரு-கிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய ஆரம்பித்துள்ளனர். பொதுவாக, மாவட்ட விவசாயிகள், நிலக்கடலை பயிருக்கு, டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்-றனர்.

டி.ஏ.பி., உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை, உலக சந்தையில் அதிகம் உள்ளதால், அதன் உற்பத்தி போதிய அளவில் இல்லை. அதற்கு மாற்றாக, வேளாண் சாகுபடிக்கு சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உர வகைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்கலாம். மாவட்டத்தில் நடப்-பாண்டு, இதுவரை நெல், 286 ஹெக்டேர், மக்காச்சோளம், 1,572 ஹெக்டேர், சிறு தானியங்கள், 15,892 ஹெக்டேர், பயறு வகைகள், 3,181 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 17,212 ஹெக்டேர்.

கரும்பு, 2,443 ஹெக்டேர், பருத்தி, 546 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான உரம் போதிய அளவில் தனியார், கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்-பட்டுள்ளன. கூட்டுறவு, தனியார் உர நிலையங்களில், யூரியா, 2,981 டன், டி.ஏ.பி., 968 டன், பொட்டாஷ், 1,119 டன், கலப்பு உரங்கள், 4,224 டன் இருப்பில் உள்ளன. டி.ஏ.பி., உரத்தை விட, சூப்பர்பாஸ்பேட் மண்ணில் குறைவான உப்புநிலையை ஏற்படுத்துகிறது.

சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தும் போது, சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துகள் கிடைக்கின்றன. எண்ணெய் வித்து பயிர்களுக்கு பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரித்து, எண்ணெய் சத்து அளவும் அதிகரிக்கிறது.

எள், சூரியகாந்தி பயிர்களுக்கு சாம்பல் சத்து அவசியம். அதனால், விவசாயிகள் சூப்பர்பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்-களை பயன்படுத்தலாம். மாவட்டத்தில், 348 டன் சூப்பர்-பாஸ்பேட், 4,224 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் உபயோகத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us