sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

/

நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

நோயாளி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


ADDED : ஆக 09, 2024 03:41 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, அங்கு சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் என தினமும், 1,000க்கு மேற்-பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் உள் நோயாளிக-ளுக்கு மருத்துமனை நிர்வாகத்தால், மூன்று நேரம் உணவு வழங்-கப்படுகிறது.

சில நாட்களுக்கும் முன், நாமக்கல்லை சேர்ந்த மாதேஸ்வரி, 60, சிகிச்சைக்காக வந்தார். உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்குள்ள நோயாளிகளுக்கு நேற்று காலை 8:30 மணி வரை உணவு வழங்கப்படாததால், மருத்துவமனை நிர்வா-கத்தை கண்டித்து திடீரென, மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் மருத்துவமனை ஆர்.எம்.ஓ.,(பொ) நீலாதரன், செவி-லியர்கள் மற்றும் நல்லிபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 10:00 மணிக்கு சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ-மனை டீன் சாந்தா அருள்மொழியிடம் கேட்டபோது, ''புகாருக்கு இடம் அளிக்காத வகையில் மருத்துவமனை நிர்வாகம் செயல்-பட்டு வருகிறது. தர்ணாவில் ஈடுபட்ட பெண், வேண்டுமென்றே அது சரி இல்லை; இது சரி இல்லை என பொய்யான குற்றச்சாட்-டுகளை கூறி வருகிறார். அரசு மருத்துவமனையை இடமாற்ற வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இவரும் ஒருவர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us