/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால் கரையோரம் வசித்த மக்கள் நிம்மதி
/
ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால் கரையோரம் வசித்த மக்கள் நிம்மதி
ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால் கரையோரம் வசித்த மக்கள் நிம்மதி
ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவால் கரையோரம் வசித்த மக்கள் நிம்மதி
ADDED : ஆக 05, 2024 02:06 AM
பள்ளிப்பாளையம், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், பள்ளிப்பாளையம் பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பள்ளிப்பாளையத்தில் அக்ரஹாரம், குமரன் நகர், நாட்டாகவுண்டம்புதுார், ஜனதா நகர், பாவடிதெரு, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆற்றோரத்தில் உள்ளன. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரமுள்ள பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இந்த பாதிப்பில், 139 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், அங்கு வசித்த, 322 பேரை பாதுகாப்பாக மீட்டு, 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த, ஐந்து நாட்களாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது. நேற்று, படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டதால், குடியிருப்பு பகுதியில் வீட்டை சுற்றிலும் சூழ்ந்துள்ள தண்ணீர் வடிந்து விட்டது. இதனால், முகாமில் தங்கியிருந்த மக்கள் தங்களது வீட்டை சுத்தம் செய்ய சென்றனர். தண்ணீர் வரத்து குறைந்ததால், கரையோர மக்கள்
நிம்மதியடைந்துள்ளனர்.