/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மகளிர் குழு தலைவி துாக்கிட்டு தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

ADDED : ஆக 22, 2024 01:55 AM
குமாரபாளையம், ஆக. 22-
மகளிர் குழு பெண்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினரின் நெருக்கடியால், குழு தலைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 34. இவர், இப்பகுதியில் உள்ள, ஆறு மகளிர் குழுவுக்கு தலைவியாக இருந்து வந்தார். இந்நிலையில், மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கு, மைக்ரோ பைனான்ஸ் மூலம் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில், கடன் வாங்கிய சில மகளிர் குழு பெண்கள், கடனை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனால், கடன் பெற்று கொடுத்த சுஜாதாவிடம், கடனை திருப்பி செலுத்தக்கோரி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சுஜாதா, நேற்று இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சுஜாதாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., இமயவரம்பன், 'குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு, சுஜாதாவின் உடலை வாங்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.