/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருநீலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
திருநீலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஆக 24, 2024 01:17 AM
திருநீலகண்டேஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகம் கோலாகலம்
நாமக்கல், நாமக்கல், போதுப்பட்டி சாலை, கலைவாணர் நகரில் விநாயகர், திருநீலகண்டேஸ்வரர், பாலமுருகன், கன்னிமார், மதுரைவீரன், கருப்பணார் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அன்று மாலை, முதல்கால யாக பூஜை, கோபுரம் கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கலசம் புறப்பாடு, 6:00 மணிக்கு திருநீலகண்டேஸ்வரர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

