/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அழைப்பு
/
பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அழைப்பு
பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அழைப்பு
பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அழைப்பு
ADDED : செப் 08, 2024 01:12 AM
பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி
மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு அழைப்பு
நாமக்கல், செப். 8-
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் நடக்கும், 'ரத்த சோகை இல்லாத கிராமம்' குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா போட்டி, மாநிலம் முழுதும் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துகொள்ள, மாவட்ட கலெக்டர் உமா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரி ளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இல்லாத பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம், ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா போட்டி, கீழ்காணும் மூன்று நிலைகளில் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 322 கிராம ஊராட்சிகளில், 9 முதல், 12 வரையிலும், 15 ஒன்றியங்களில், 16 முதல், 20 வரையிலும், மாவட்ட அளவில், 25ம் தேதியிலும் போட்டிகள், உணவுத்திருவிழா நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு நிலையான ஆரோக்கியத்தை பேணும் வகையில் கிடைக்கும் சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டே சரிவிகித உணவை பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய
நோக்கமாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.