/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி
/
டூவீலரில் சென்றவர் தவறி விழுந்து பலி
ADDED : ஆக 22, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ஆக. 22---
ப.வேலுார் அருகே, பொய்யேரியை சேர்ந்தவர் செந்தில்குமார், 46; லாரி டிரைவர். இவருக்கு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரது மகன் மதன்ராஜ், 22, தன் டூவீலரில், செந்தில்குமாரை அமர வைத்துக்கொண்டு, மோகனுாரில் இருந்து, ப.வேலுார் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கவுண்டம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றபோது, திடீரென செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.