/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உருது தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா
/
உருது தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : செப் 02, 2024 03:14 AM
நாமக்கல்: -நாமக்கல்லில், மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி நுாற்-றாண்டு நினைவு விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு, பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி தவு-லத்கான் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற துணைத்த-லைவர் துபேல் அகமது வரவேற்றார். கட்டட நன்கொடையா-ளர்கள் அபுபக்கர், முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாடு வக்புவாரிய தலைவர் அப்துல்ரகுமான், புதிய கட்டடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். கலெக்டர் உமா, கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். எம்.பி., ராஜேஸ்குமார், ஏழை முஸ்லிம்களுக்கு நலத்திட்ட
உதவிகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, நகர தி.மு.க., செயலாளர் ராணா ஆனந்த், பள்ளிவாசல் தலைமை இமாம் சாதிக்பாஷா, காங்கிரஸ்
கட்சி மாவட்ட தலைவர் சித்திக், உருது பள்ளி தலைமை ஆசிரியை உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.