/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு பரிசோதனை விவேகானந்தா மருத்துவமனை அறிவுரை
/
ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு பரிசோதனை விவேகானந்தா மருத்துவமனை அறிவுரை
ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு பரிசோதனை விவேகானந்தா மருத்துவமனை அறிவுரை
ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு பரிசோதனை விவேகானந்தா மருத்துவமனை அறிவுரை
ADDED : ஜூலை 01, 2024 04:02 AM
திருச்செங்கோடு: ''ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கூடுதல் நிர்வாக இயக்குனர் மற்றும்
நீரிழிவு நோய்த்துறை தலைவருமான டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''உலகம் முழுதும், 150 கோடிக்கும் மேலானோர், இரண்டு வகையான நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரும் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. நீரிழிவு நோய் வராமல் தடுக்க, மக்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
இருதய நோய்த்துறை மருத்துவர் சந்தோஷ்குமார் கூறுகையில், ''நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால், எட்டு பேருக்கு ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.
இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க, திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில், 24 மணி நேரமும், இ.சி.ஜி., ஆஞ்சியோகிராம் வசதி, பைபாஸ் அறுவை சிகிச்சை வசதி, 'சிடி' ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ளது. அனைத்து விதமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள், ஆர்த்ரோஸ்கோப்பி மூலம் மூட்டு ஜவ்வு கிழிந்தவை சரி செய்யும் அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான பிறவி குறைபாடுகளை சரி செய்யும் அறுவை சிகிச்சை, மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களை கொண்டு செய்யப்
படுகிறது. தொடர்புக்கு, 7373600600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.