sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

46 இடங்களில் வனப்பறவை கணக்கெடுப்பு வரும் 9ல் பணி தொடக்கம்

/

46 இடங்களில் வனப்பறவை கணக்கெடுப்பு வரும் 9ல் பணி தொடக்கம்

46 இடங்களில் வனப்பறவை கணக்கெடுப்பு வரும் 9ல் பணி தொடக்கம்

46 இடங்களில் வனப்பறவை கணக்கெடுப்பு வரும் 9ல் பணி தொடக்கம்


ADDED : மார் 06, 2025 03:40 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: 'மாவட்டத்தில், 46 இடங்களில் ஈர நிலப்பறவைகள் மற்றும் வனப்பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெ-டுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு வரும், 9ல் ஈர நிலங்களிலும், வரும், 16ல் வனப்பகுதிகளிலும் நடக்கிறது. கல்-லுாரி மாணவ, மாணவியரின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், வன உயிரினங்களின் வாழ்விடம், இடப்பெயர்வு, பற-வைகளின் நிலை பற்றிய விபரத்தை அறிந்துகொள்வது அவ-சியம். அதனால், நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த, 20 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடக்க உள்ளது. நாமக்கல் வனச்சரகத்தில் உள்ள பழையபாளையம், சரப்பள்ளி, நாச்சிப்-புதுார், இடும்பன் குளம், கஸ்துாரிப்பட்டி ஆகிய ஏரிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடத்தப்படும்.

ராசிபுரம் இடைபடு காடுகள் பகுதியில் உள்ள ஏ.கே.சமுத்திரம், கண்ணுார்பட்டி, புதுச்சத்திரம், தும்பல்பட்டி ஆகிய ஏரிகளில், பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். மேலும், ஜேடர்-பாளையம், பருத்திப்பள்ளி, உமயம்பட்டி, இலுப்பிலி, கேனேரிப்-பட்டி, ஓசக்காரனுார், குருக்கபுரம், புத்துார் ஆகிய ஏரிகளிலும், கொல்லிமலை வனச்சரகத்தில் உள்ள வாசலுார்பட்டி ஏரி உள்-ளிட்ட, 20 இடங்களில் ஈரநிலப்பறவை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

நாமக்கல் வனச்சரகத்தில் உள்ள சேந்தமங்கலம், ஜம்பூத், எரு-மப்பட்டி, தலமலை வடக்கு, நெட்ட வேலம்பட்டி, புளியஞ்-சோலை ஆகிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில், வனப்-பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். மேலும், ராசி-புரம், கொல்லிமலை, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொத்தம், 26 இடங்களில் வனப்பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள தன்னார்வ-லர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் கலந்து-கொள்ளலாம். பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வமுள்ள புகைப்பட வல்லுனர்கள், அனுபவம் உள்ள தன்-னார்வலர்கள், பறவை நிபுணர்கள் அனைவரும் பணியில் கலந்து-கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us