ADDED : மே 04, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் நெடுஞ்சாலையில், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிரே பிரிவு சாலை செல்கிறது. அதனால், இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று
வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் பிரிவு சாலையில் இருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒருசில நாட்களில் விபத்துகளும் நடக்கின்றன. இச்சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.