/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் பெண் கைது
/
தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் பெண் கைது
ADDED : செப் 01, 2024 03:48 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 38. இவர், மகளிர் குழு தலைவியாக உள்ளார். மைக்ரோ பைனான்சில் மகளிர் குழுவுக்கு கடன் வாங்கியுள்ளார். குழுவில் உள்ள மகளிர் சிலர் கடன் கட்டவில்லை என்றால், அவர்களது பணத்தையும் சுஜாதா கட்டி வந்துள்ளார். இதற்காக வெளியிலும் பணம் வட்டிக்கு வாங்கி கட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுஜாதாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்-டது. இதனால் குழுவுக்கு பணம் கட்ட முடியாமலும், வெளியில் வட்டிக்கு வாங்கிய பணம் கட்ட முடியாமலும் இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரிடமும் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். பணம் தராததால் பொது வெளியில் சுஜாதாவை, கவிதா கடுமையாக பேசியுள்ளார்.இதனால் மனமுடைந்த சுஜாதா, தற்கொலை செய்வதற்கு யார் காரணம் என மூன்று நிமிடம் வீடியோ பதிவு செய்து விட்டு, 21ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, பள்ளிப்பாளையம் போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக கவிதா, 45, மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கவிதாவை, திருப்பூர் சென்று கைது செய்து நேற்று இரவு பள்ளிப்பாளையம் அழைத்து வந்தனர்.