ADDED : மே 31, 2024 03:27 AM
மல்லசமுத்திரம்: வைகாசிமாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையத்தில் உள்ள பழமைவாய்ந்த காலபைரவர் கோவிலில் நேற்று பகல் 12:00 மணியளவில் சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. பெண்கள் வெண்பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் ஜாதகத்தை பைரவர் காலில் வைத்து, விரைவில் திருமணமாக வேண்டிக் கொண்டனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* நாமக்கல் தட்டாரத்தெரு, காமாச்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவர் சன்னதியில், வைகாசி தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு அக்னி காலபைரவருக்கும், உற்சவ மூர்த்திக்கும் மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபி ேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.