/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சமயசங்கிலி பகுதியில் நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
/
சமயசங்கிலி பகுதியில் நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
சமயசங்கிலி பகுதியில் நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
சமயசங்கிலி பகுதியில் நாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் பலி
ADDED : பிப் 07, 2025 04:00 AM
பள்ளிப்பாளையம்: சமயசங்கிலி பகுதியில் வெறிநாய்கள் கடித்து, ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலில் இருந்த 10 ஆடுகள் பலியாயின.
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி பகுதி விவசாயம் நிறைந்த, இப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றின் மையப்பகு-தியில் புல்வெளி உள்ளதால், இந்த பகுதியில் ஆடுகளை மேயச்ச-லுக்கு விடுவது வழக்கம். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டனர்.மாலை, 4:00 மணிக்கு ஆற்றுப்பகுதியில் கும்பலாக சுற்றி கொண்-டிருந்த வெறி நாய்கள், மேய்ச்சலில் இருந்த ஆடுகளை துரத்தி, துரத்தி வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடித்துள்ளது. ஆடு-களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் பதறியபடி வந்தனர். ஆட்கள் வருவதை பார்த்தவுடன் வெறிநாய்கள் தப்பி சென்றன.
வெறிநாய் கடித்ததில் அன்பழகன், விஜயா, கிருஷ்ணவேணி ஆகி-யோருக்கு சொந்தமான, 10 ஆடுகள் இறந்து விட்டன. இறந்த ஒவ்வொரு ஆடும் தலா, 13 ஆயிரம் ரூபாய் மதிப்புடையது. இறந்த ஆடுகளை ஆற்றின் மையப்பகுதியில் இருந்து, பரிசல் மூலம் கரைக்கு வருவாய்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர். மூன்று ஆடுகளை காணவில்லை. காயமடைந்த ஆறு ஆடு
களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.