sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்'

/

'பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்'

'பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்'

'பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்'


ADDED : ஜன 21, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடி-யினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில், பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சிக்கு மாணவ,

மாணவியர் தேர்ந்தெ-டுக்கப்பட்டனர். அவர்கள், சென்னையில் நடக்கும் பழங்குடியி-னர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழிகாட்டி பயிற்சி முகாமில் கலந்துகொள்கின்றனர். அவர்களை வழிய-னுப்பும் நிகழ்ச்சி, நாமக்கல்

கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாநக-ராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். தமிழக ஆதிதிரா-விடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சென்னை செல்லும்

வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக, அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:இளைஞர்களின் தனி திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்-வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்ப-டையில் பழங்குடியினர் மாணவ, மாணவியரின் திறனை ஊக்கு-விக்கும் வகையில்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்-துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், பழங்குடியினர்களுக்கான வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு வழி-காட்டி பயிற்சி சென்னையில் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி

வகுப்பில், 24 வகையான திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால், 100 சதவீதம் வேலைவாய்ப்புகளை பெறமுடியும்.இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us