/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
/
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
கொங்குநாடு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2வில் 100 சதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2025 01:10 AM
நாமக்கல், நாமக்கல், நல்லிபாளையத்தில் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2024-25ல் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் மாணவி கார்த்திகா, 600க்கு, 598 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம், மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதில், தமிழ்,- 99, ஆங்கிலம், 99, இயற்பியல், 100, வேதியியல், 100, கணினி அறிவியல், -100, கணிதம், - 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதேபோல், மாணவி வர்ஷா, 600க்கு, 593 மதிப்பெண் பெற்று, பள்ளியில், 2ம் இடம்; மாணவன் கார்த்திகேயன், 600க்கு, 588 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இயற்பியல், 2, வேதியியல், 5, கணினி அறிவியல், 10, கணிதம், 4, பொருளியல், 1, வணிகவியல், 1 என, மொத்தம், 23 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பள்ளி மாணவ,-மாணவியர், 100 சதவீதம் தேர்ச்சியுடன் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி நிறுவனர்களான பேராசிரியர்கள் ராஜன், ராஜேந்திரன், தாளாளர் ராஜு, செயலாளர் வாசுதேவன், இயக்குனர்கள் தங்கவேல், ராமசாமி, பள்ளி முதல்வர் திவ்யநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.