/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
30ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1,00,008 வடைமாலை சாத்துபடி
/
30ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1,00,008 வடைமாலை சாத்துபடி
30ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1,00,008 வடைமாலை சாத்துபடி
30ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 1,00,008 வடைமாலை சாத்துபடி
ADDED : டிச 16, 2024 03:16 AM
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரத்தில், கைகூப்பி வணங்கிய நிலையில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்-பாலிக்கிறார்.
தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து ஆஞ்ச நேயரை தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்துபடி செய்யப்படும். தொடர்ந்து, 10:00 மணிக்கு அபிஷேகம் நடக்கி-றது.மார்கழி மாத அமாவாசை தினத்தில், மூல நட்சத்திரத்தில் ஆஞ்-சநேயர் பிறந்ததாக ஐதீகம். இதையொட்டி, ஆண்டுதோறும் அந்த நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டா-டப்படுகிறது. இந்தாண்டு வரும், 30ல், மார்கழி அமாவாசை மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. இதையடுத்து, அன்று அதிகாலை, 5:00 மணிக்கு, ஆஞ்சநேய-ருக்கு, ஒரு லட்சத்து, 8 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.
தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். காலை, 11:00 மணிக்கு, நல்லெண்ணெய், சீயக்காய், திருமஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் சந்-தனம், உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இதையடுத்து, சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.