/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10,008 லட்டு தயாரிப்பு தீவிரம்
/
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10,008 லட்டு தயாரிப்பு தீவிரம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10,008 லட்டு தயாரிப்பு தீவிரம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி 10,008 லட்டு தயாரிப்பு தீவிரம்
ADDED : டிச 29, 2025 07:21 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி-யையொட்டி, பக்தர்களுக்கு வழங்க, 10,008 லட்-டுகள் தயாரிக்கும் பணியை, ஜங்களாபுரம் தலைமை ஆசிரியர் சவுந்தரராஜனின் மகன் செந்-தில்குமரன், மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து செய்து வரு-கின்றனர்.
மார்கழி மாதம் கடவுளுக்கு உகந்த மாதம் என்-பதால், காலை வேளையில் திருப்பாவை பக்த குழுவினர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பாசுரம் படித்து, நம்பெருமாளை தரி-சனம் செய்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை லட்சுமி நாராயண பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.பெருமாளை வணங்கும் பக்தர்கள் பகல் பத்து, ராபத்து விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியே வந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சொர்க்க வாசலை காண வரும் பக்-தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட உள்-ளது.

