ADDED : டிச 29, 2025 07:14 AM
ராசிபுரம் உழவர் சந்தையில், கடந்த வாரம் தக்-காளி விலை கிலோ, 52 ரூபாய்க்கு விற்பனையா-னது. ஆனால், நேற்று, 6 ரூபாய் உயர்ந்து, 58 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல், கத்தரிக்காய், 75 ரூபாய், வெண்டை, 55, புடலை, 50, பீர்க்கன், 65, பாகல், 70, சுரைக்காய், 18, பச்சை மிளகாய், 48, முருங்கை, 120, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 40, முட்-டைகோஸ், 30, கேரட், 65, பீன்ஸ், 60, பீட்ரூட், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. காய்க-றிகள், 28,895 கிலோ, பழங்கள், 9,810 கிலோ, பூக்கள், 370 கிலோ என, மொத்தம், 39,075 கிலோ விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு, 17.77 லட்சம் ரூபாயாகும்.
பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த தக்காளி வியாபாரி கூறுகையில், ''கடந்த, 15 நாட்களாக குளிரின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தக்காளி வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைந்-ததால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிக-ரித்தால், விலை குறைந்து விடும்'' என்றார்.

