/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோட்டில்1,008 சிவலிங்க பூஜை
/
திருச்செங்கோட்டில்1,008 சிவலிங்க பூஜை
ADDED : ஏப் 16, 2025 01:21 AM
திருச்செங்கோட்டில்1,008 சிவலிங்க பூஜை
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், தேசிய சிந்தனை பேரவை சார்பில் உலக அமைதி, மழை வேண்டி, 1,008 சிவலிங்க பூஜை மற்றும் கன்னியா வந்தனம் நிகழ்ச்சி நடந்தது. தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் தீபமேற்றி தொடங்கி வைத்தார். செங்குந்தர் பாவடி பஞ்., நாட்டாண்மைக்காரர் கார்த்திகேயன், நந்தி கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து, மண்ணால் சிறிய அளவில் உருவாக்கப்பட்ட, 1,008 சிவலிங்கம், கங்கை தீர்த்தம், காசி மிட்டாய் மாவு, உருண்டை பிரசாதம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் வைத்து பூஜை நடந்தது. ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிவலிங்க பூஜையின் பலன்கள் குறித்து பேசினார். அர்த்தநாரீஸ்வரர் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

