/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்
/
ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம்
ADDED : மே 19, 2025 02:40 AM
நாமக்கல்: வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்ச நேயர் சுவாமிக்கு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தமிழ், தெலுங்கு, ஆங்கில புத்தாண்டு, ஏகாதசி, அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். அதன்படி, நேற்று வைகாசி முதல் ஞாயிறையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு வடை மாலை சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 10:00 மணிக்கு நல்லெண்ணெய், 1,008 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.