/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க 2வது மாவட்ட மாநாடு
/
'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க 2வது மாவட்ட மாநாடு
'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க 2வது மாவட்ட மாநாடு
'108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க 2வது மாவட்ட மாநாடு
ADDED : டிச 09, 2024 07:11 AM
நாமக்கல்: தமிழ்நாடு, '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின், 2வது மாவட்ட மாநாடு, நாமக்கல் -துறையூர் சாலை, அண்ணாநகரில், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கக்கூடாது. தொழிலாளர்களை சட்ட விரோத பணி நீக்கம், பணியிட மாறுதல் செய்து மற்ற மாநிலங்களை போல், '108' ஆம்புலன்ஸ் சேவையை தனியார் மயமாக்கி பெயரளவிற்கான சேவையாக நடத்த முயற்சிக்கக்கூடாது.
தனியார் மருத்துவ ஆயுள் காப்பீட்டிற்கு பெரும் தொகையை ஒதுக்கீடு செய்து, தரமான மருத்துவத்தை பெற்றுக்கொள்ள பொதுமக்களை நெருக்கடிக்கு ஆளாக்குவதை கைவிட்டு விட்டு அரசு மருத்துவமனைகளை உரிய வகையில் தரமாக பராமரித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சாமிவேல், கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன், மாநில செயலாளர் சிவக்குமார், முன்னணி பொறுப்பாளர் தனபால், மாநில துணை பொதுச்செயலாளர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் சந்திரமோகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.