/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
/
முருகன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED : நவ 18, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம் :கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி, சேந்தமங்கலம் அருகே உள்ள தத்தகிரி முருகன் கோவிலில், நேற்று, 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக, காலை, 9:00 மணியளவில் யாக வேள்வியுடன் கலசம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, முருகனுக்கு அரிசி மாவு, திருமஞ்சன பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் முதலிய திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

