/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் ரூ.2.90 கோடியில் 1,185 டன் கொள்முதல்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் ரூ.2.90 கோடியில் 1,185 டன் கொள்முதல்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் ரூ.2.90 கோடியில் 1,185 டன் கொள்முதல்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் ரூ.2.90 கோடியில் 1,185 டன் கொள்முதல்
ADDED : ஜூன் 18, 2025 01:20 AM
நாமக்கல், 'தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நாமக்கல் மாவட்டத்தில், 2.90 கோடி ரூபாய் மதிப்பில், 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ல் பள்ளிப்பாளையத்தில், 9,920 ஏக்கரிலும், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி வட்டாரத்தில், 5,425 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி, பரவலாக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் திட்டப்படி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வசதியாக, குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, கலியனுார் அக்ரஹாரத்தில், கடந்த ஜன., 23 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. எருமப்பட்டி வட்டாரத்தில், கோணங்கிப்பட்டி கிராமத்தில், கடந்த, பிப்., 10 முதல், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
இதன் மூலம், நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம், 246 விவசாயிகளிடமிருந்து, 1,185.360 மெட்ரிக் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்
பட்டுள்ளது.
சன்ன ரக நெல் கிலோ, 24.50 ரூபாய், பொது ரகம், 24.05 ரூபாய் வீதம் கொள்முதல் செய்யப்பட்டது. சன்ன ரகம், 1,117.960 மெட்ரிக் டன், பொது ரகம், 67.400 மெட்ரிக் டன் என, மொத்தம், 1,185.360 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குண்டான தொகை, 2.90 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.