/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு
/
12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு
12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு
12,600 போஸ்டர்கள் அகற்றம் மாவட்டத்தில் 4 வழக்குகள் பதிவு
ADDED : ஏப் 06, 2024 02:22 AM
ராசிபுரம்:தேர்தல்
நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், நாமக்கல் மாவட்டத்தில், 12,682
இடங்களில் பேனர், போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக, 4
வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தல் தேதி கடந்த, 16ல்
அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்., 19ல் முதல்கட்டத்திலேயே
ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல்
நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பொது இடங்களில் இருந்த
கட்சி விளம்பரங்கள், பேனர்கள், சுவர் விளம்பரம், போஸ்டர், கொடி கம்பம்
உள்ளிட்டவை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதுமட்டுமின்றி நகர் பகுதியில் தனியார் இடங்களில் இருந்த கட்சி
அடையாளங்களும் அகற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் பொது
இடங்களில் இருந்த, 1,372 சுவர் விளம்பரங்கள், 4,400 போஸ்டர்கள், 1,699
பேனர்கள், 2,749 கொடிக்கம்பங்கள் என, 10,220 இடங்களில் கட்சி
அடையாளங்கள் அகற்றப்பட்டன. இதேபோல், தனியார் இடங்களில் இருந்த,
1,104 சுவர் விளம்பரங்கள், 1,129 போஸ்டர்கள், 150 பேனர்கள் உள்ளிட்ட,
2,462 இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம்,
12,682 இடங்களில் கட்சி சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது
தொடர்பாக, 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல்
நடத்தும் அலுவலரும் கலெக்டருமான உமா தெரிவித்துள்ளார்.

