/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12ல் சேலத்தில் மாநில செயற்குழு கூட்டம்; விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு

ADDED : செப் 09, 2024 06:51 AM
நாமக்கல்: 'வரும், 12ல், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சவுடாம்பிகா ஓட்டலில், மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. சங்க நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரும், 12 காலை, 10:00 மணிக்கு, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள சவுடாம்பிகா ஓட்டலில், மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், தமிழக விவசாயிகள், தங்கள் நிலத்தில் உள்ள தென்னை, பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழக அரசு நீக்க வேண்டும். தமிழகம் முழுதும் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். தமிழக அரசு, 2021 சட்டசபை தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுவதுடன், இது குறித்து விவாதிக்கப்படுகிறது. அதனால், நமது சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாவட்டங்களில் உள்ள முன்னணி விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்வதுடன், விவசாயிகளின் சிரமங்களை போக்க ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.