/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.37 லட்சம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.37 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 25, 2024 07:19 AM
பள்ளிப்பாளையம் : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில் பறக்கும் படை குழுக்குள், 9, நிலையான கண்காணிப்பு குழுக்கள், 9, வீடியோ பார்வை குழுக்குள், 1 என மொத்தம், 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், தொகுதி முழுதும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று காலை, 8:00 மணிக்கு பள்ளிப்பாளையம் அருகே, தெற்குபாளையம் பகுதியில் நிலையான கண்காணிப்பு அலுவலர் தனசேகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இடைப்பாடியை சேர்ந்த மாட்டு வியாபாரி ஆவணமின்றி எடுத்துச் சென்ற, 77,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.* நாமக்கல் மாவட்ட எல்லையான எம்.மேட்டுப்பட்டியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, குளித்தலையில் இருந்து ஓமலுார் நோக்கி சென்ற செங்கல் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, செங்கல் விற்ற பணம், 60,000 ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

