/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., உறுப்பினர் 144 பேரின் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி
/
தி.மு.க., உறுப்பினர் 144 பேரின் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி
தி.மு.க., உறுப்பினர் 144 பேரின் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி
தி.மு.க., உறுப்பினர் 144 பேரின் குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் நிதி
ADDED : நவ 13, 2024 07:29 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து, மங்களபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த, 3 மாதங்களில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த, தி.மு.க., உறுப்பினர்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் கலந்துகொண்டு நிதி வழங்கினார்.
முன்னதாக, உயிரிழந்த, 144 பேரின் படங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, 10,000 ரூபாய் வீதம், 14.44 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கினார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் வாமலை உருவபடத்தை திறந்து வைத்து மலர் துாவி மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, டவுன் பஞ்., செயலாளர்கள் செல்வராஜ், அன்பழகன், ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.