sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

6 சட்டசபை தொகுதிகளில் 14,49,018 வாக்காளர்கள் மாவட்டம் முழுவதும் புதிதாக 12,951 பேர் சேர்ப்பு

/

6 சட்டசபை தொகுதிகளில் 14,49,018 வாக்காளர்கள் மாவட்டம் முழுவதும் புதிதாக 12,951 பேர் சேர்ப்பு

6 சட்டசபை தொகுதிகளில் 14,49,018 வாக்காளர்கள் மாவட்டம் முழுவதும் புதிதாக 12,951 பேர் சேர்ப்பு

6 சட்டசபை தொகுதிகளில் 14,49,018 வாக்காளர்கள் மாவட்டம் முழுவதும் புதிதாக 12,951 பேர் சேர்ப்பு


ADDED : அக் 30, 2024 01:07 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

6 சட்டசபை தொகுதிகளில் 14,49,018 வாக்காளர்கள்

மாவட்டம் முழுவதும் புதிதாக 12,951 பேர் சேர்ப்பு

நாமக்கல், அக். 30-

மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து, 49,018 பேர் உள்ளனர். அதில், புதிதாக, 12,951 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகளில், மொத்தம், 1,629 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கடந்த மார்ச், 27 வாக்காளர் பட்டியல்படி, மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து, 40,996 பேர்.

தற்போது, புதிதாக சேர்க்கப்பட்டவர்கள், 12,951 பேர், நீக்கம் செய்யப்பட்டவர்கள், 4,929 பேர். வரைவு வாக்காளர் பட்டியல்படி, ஆண் வாக்காளர்கள், 7,01,538, பெண் வாக்காளர்கள், 7,47,234, இதரர், 246 பேர் என, மொத்தம், 14 லட்சத்து, 49,018 பேர் உள்ளனர்.

இப்பட்டியல்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம். இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக, இன்று (நேற்று) முதல், வரும், நவ., 28 வரை, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணியின்போது, 2025 ஜன., 1ல், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும், 17 வயது பூர்த்தி அடைந்தவர்களும், தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயர்கள், 18 வயது பூர்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

இதுவரை, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும், உரிய விண்ணப்பங்களை, தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, தேர்தல் தாசில்தார் செல்வராஜ், அரசுத்துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

சட்டசபை தொகுதி ஓட்டு சாவடி ஆண் பெண் 3ம் பாலினம் மொத்தம்

ராசிபுரம் (எஸ்.சி.,) 261 1,12,566 1,18,719 10 2,31,295

சேந்தமங்கலம் (எஸ்.டி.,) 284 1,19,929 1,25,950 31 2,45,910

நாமக்கல் 290 1,24,875 1,34,681 54 2,59,610

ப.வேலுார் 254 1,05,878 1,15,441 10 2,21,329

திருச்செங்கோடு 261 1,12,227 1,19,336 64 2,31,627

குமாரபாளையம் 279 1,26,063 1,33,107 77 2,59,247

மொத்தம் 1,629 7,01,538 7,47,234 246 14,49,018






      Dinamalar
      Follow us